மேகாலயா முன்னாள் முதல்வர் லபாங் காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      இந்தியா
lapang deviation from Congress 14-09-2018

ஷில்லாங்,மேகாலயா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், அங்கு நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவருமான டி.டி. லபாங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.

காங்கிரசில் இருந்து விலகுவதாக கூறிய அவர், இது குறித்து கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மிகுந்த மனவேதனையுடன், காங்கிரசில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேகாலயா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.டி. லபாங். அம்மாநில முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர். 50 ஆண்டு காலமாக லபாங் காங்கிரசில் இருந்து வந்தார். அவர் வேறு கட்சியில் சேரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பதவி விலகல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து