முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அணியில் மகனை சேர்த்தாக இன்சமாம் உல்- ஹக் மீது புகார்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இப்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவராக இருக்கிறார். இவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி தன் மகன் இப்தஸம் உல்-ஹக்கை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சேர்த்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. 19 வயதுக்கு உட்பட் டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பசித் அலியிடம் இன்சமாம் பேசியதாகவும் இதையடுத்து அவர் மகன் அணியில் சேர்க்கப்பட்டதாகவும் முன்னாள் அணி தேர்வுக் குழு தலைவர் அப்துல் காதிர் புகார் கூறியிருந்தார்.

இது பிரச்னையானதை அடுத்து இன்சமாம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘என் மீது ஆதாரமில்லாமல் கெட்ட நோக்கத்தோடு கூறப்படும் புகாரை நிராகரிக்கிறேன். என் மகனை அணியில் சேர்ப்பதற்காக நான் யாரிடமும் பேசியதில்லை. அதில் உண்மையுமில்லை. நான் இதை தீவிர மாக எடுத்துக்கொள்கிறேன். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து