முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா தான் விற்க வேண்டும்: அகிலேஷ்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ,அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா விற்கும் நிலைமைதான் ஏற்படும் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் பேசினார்.
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடத்தினர்.

இதல் கலந்து கொண்டு அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் என்பது எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சோதனை. பா.ஜ.க.வினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். எதிர்கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு நடந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை மனதில் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும். வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உத்தரப் பிரதேச மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து