முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி: அமித்ஷா சந்திரசேகர ராவ் மீதும் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் சிறிய மாநிலத்திற்கு அதிக பொருட்செலவை சந்திரசேகர ராவ் ஏற்படுத்தி விட்டார் என்றும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

தெலுங்கானா அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 9 மாதங்கள் முன்பாகவே அம்மாநில சட்ட சபை கடந்த 6-ம் தேதி கலைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஐதராபாத்தில் நேற்று பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமித்ஷா, அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவான சக்தியாக உருவெடுக்கும் என்றார். இதன் மூலம், தெலுங்கானாவில், மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் திட்டத்திற்கு முதலில் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் இப்போது முன்கூட்டியே ஆட்சியை கலைத்து சட்டசபைக்கு தனியாகவும் லோக்சபாவுக்கு தனியாகவும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம், இந்த சிறிய மாநிலத்திற்கு அதிக பொருட்செலவை ஏற்படுத்தி விட்டார் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து