முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் : புதுமுக நடிகர் விவேக் ராஜ்கோபால்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

சத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'  படத்தின் நாயகன்  புதுமுக நடிகர் விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார். மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் KM இயக்கத்தில்அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் 'எச்சரிக்கை `, இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பார்கள். விவேக்  ஓர்  அறிமுக நடிகராக இருந்தாலும் ,அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

"இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில்  கலந்து கொண்டேன். சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி . `பாகுபலி `படம்  எல்லாம்  வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது.  அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம் , பயம் எனக்குள் இருந்தது,  ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகிப்பேசிப்பழகி  என்னை ஆச்சரியப்பட வைத்தார் . நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார். அதே போல வரலட்சுமி , சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். அது மட்டுமல்ல தாரை தப்பட்டை  படத்தில்  சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல் சண்டை காட்சிகள் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை . இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவங்கள் " என்கிறார்,  "பலரும் என்னைப் பாராட்டி ஊக்கப் படுத்தினார்கள், நான் பிரமிக்கும் ஜாம்பவான்கள் இயக்குநர்கள் கெளதம் மேனன். ஏ.ஆர்.முருகதாஸ்  தொடங்கி நடிகர்கள் தனுஷ் ,ஜெயம் ரவி ,  சிம்பு , சித்தார்த் என்று தொடர்ந்து ,ஹரீஷ் கல்யாண் வரை பலரும் படக் குழுவை வாழ்த்தி ட்விட்டரில் என்னையும் டேக்  செய்திருந்தார்கள், அது மறக்க முடியாதது. " என்கிறார், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து