முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக ரீதியிலான பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா,புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைகளுடன் பி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது.

பிரிட்டனை...இதற்கான கவுண்ட் டவுன், நேற்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கியது. பிரிட்டனைச் சேர்ந்த சுர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவ னத்திற்குச் சொந்தமான நோவா எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ்.ஒன்.போர் ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களையும் வணிக ரீதியில் இந்திய ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
காண்காணிப்பு

இயற்கைப் பேரிடர், வெள்ள பாதிப்பு, பனிப் படலம் ஆகியவற்றை கண்காணிக்க 445 கிலோ எடைகொண்ட நோவா எஸ்.ஏ.ஆர் செயற்கைக் கோளும், பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் காண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக எஸ்.ஓன்.போர் செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி தளத்தில் இருந்து இன்று இரவு 10 மணி 7 நிமிடங்கள் அளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து