முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் சுனில் கவாஸ்கர் அறிவுரை

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதிக்க விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்தது...இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வித்தியாசம் உள்ளது...இந்நிலையில் விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்றும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பீல்டர்களை சரியான இடத்தில் நிற்க வைப்பது அல்லது பந்து வீச்சை சரியான நேரத்தில் மாற்றுவது ஆகியவற்றில் விராட் கோலியின் செயல்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன்மூலம் அவருடைய அனுபவ குறைபாடு தெளிவாக தெரிகிறது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து