முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 பாராளுமன்ற தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக களமிறங்கும் அவரது மகள் ஆஷா லல்லு கட்சி சார்பில் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரது மகள் ஆஷா பஸ்வான் லல்லு கட்சியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ்வானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் ஆஷா. இது குறித்து ஆஷாவின் கணவர் அனில் சாது கூறுகையில், பஸ்வானுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பஸ்வான் தனது மகன் சிராக் பஸ்வானுக்கு ஆதரவாகவே இருக்கிறார். அவருக்குத்தான் கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கொடுத்தார். கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் ஆக்கினார். இதை கட்சியினர் விரும்பவில்லை. மேலும் தனது முதல் திருமணம் மூலம் பிறந்த மகள்களை அவர் புறக்கணித்து வருகிறார். அவர்களை மதிப்பதில்லை, கண்டு கொள்வதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பஸ்வானையும், அவரது மகனையும் எதிர்த்துப் போட்டியிட நானும் எனது மனைவியும் தயாராகவே உள்ளோம். லல்லுவும், தேஜஸ்வி யாதவும் (லல்லு மகன்) சீட் கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார் சாது.பஸ்வான் தற்போது ஹாஜிப்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவரது மகன் சிராக் பாஸ்வான் சமுய் தொகுதி உறுப்பினர் ஆவார். பஸ்வானின் தம்பி ராமச்சந்திர பஸ்வான் சமஷ்டிபூர் தொகுதி எம்.பியாக இருக்கிறார். பஸ்வானின் இன்னொரு தம்பியான பசுபதி குமார் பரஸ், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். பஸ்வானுக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள். அதில் 2-வது மகள்தான் ஆஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து