முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதியுடன் அகிலேஷ் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது: உ.பி. துணை முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா கூறியுள்ளார்.

லக்னோவில் பா.ஜ.க.வின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அணி சார்பில்  நடைபெற்ற கூட்டத்தில் கேசவ பிரசாத் மெளரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதவதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் விமர்சித்தார். அவர் மேலும் கூறியதாவது:

அகிலேஷ் யாதவ், கட்சித் தலைவர் பதவியை தனது தந்தை முலாயம் சிங்கிடம் இருந்து பறித்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தனது சித்தப்பா சிவபால் யாதவிடம் சண்டையிட்டுக் கொண்டார். அவரால், தனது குடும்பத்தினரை ஓரணியில் திரட்ட முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில், மாயாவதியுடன் அவரால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?

அகிலேஷ் யாதவ் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவர் சாதித்தது என்ன?

கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலாகட்டும், 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலாகட்டும், யாதவ சமூகத்தினரின் ஆதரவு இல்லையெனில், பா.ஜ.க.வால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும், யாதவ சமூகத்தினரின் ஆதரவின்றி, பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. எனவே, யாதவ சமூகத்தினர் அதிகமுள்ள வாக்குச் சாவடிகளில் தாமரை மலர வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 74 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்றார் கேசவ பிரசாத் மெளரியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து