முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்டில் எம்.பி.யின் பாதங்களை கழுவிய நீரை குடித்த பா.ஜ.க. தொண்டர்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கோடா,ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதி எம்.பி. நிஷிகாந்த் துபேயின் பாதங்களைத் தண்ணீரால் கழுவிய தொண்டர் ஒருவர் அதே நீரை குடித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை, வழக்கான நடைமுறைதான் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கோடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கோடா மக்களவைத் தொகுதி எம்.பி. நிஷிகாந்த் துபே பங்கேற்றார். அப்போது, எம்.பி. நிஷி காந்த் துபேயை ஒரு செப்புத் தட்டில் நிற்க வைத்து, அவரின் கால் பாதங்களை பா.ஜ.க. தொண்டர் பவன் ஷா தண்ணீர் ஊற்றிக் கழுவினார். பின்னர் பாதங்களைக் கழுவி முடித்த அந்தத் தொண்டர், அந்த நீரை எடுத்துக் குடித்து விட்டார். இந்த வீடியோ காட்சியை எம்.பி. நிஷிகாந்த் துபே தனது பேஸ்புக்கில் பதிவிட்டு அந்தத் தொண்டரைப் பாராட்டியுள்ளார்.எம்.பி. நிஷிகாந்தின் இந்தப் பதிவும், அவரின் வீடியோவும் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில்: என்னுடைய பாதங்களைத் தொண்டர் ஒருவர் கழுவி, அந்த நீரைக் குடித்ததில் தவறு என்ன இருக்கிறது? ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கம். இதற்கு ஏன் அரசியல் ரீதியான சாயம் பூசுகிறீர்கள். உங்களின் விருந்தினர்களின் பாதங்களை நீங்கள் கழுவி விடுவதில் என்ன தவறு இருக்கிறது. மகாபாரதம், ராமாயணக் கதைகளைப் படியுங்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து