முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரம் 3 முறை குழந்தையை பார்க்க சிறையில் உள்ள பெண் கைதிக்கு அனுமதி மத்திய அமைச்சர் மேனகா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை, வாரத்துக்கு 3 முறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது;தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை 5 வயது வரை சிறையிலேயே வளர்த்துக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால் 5 வயது முடிந்ததும் அந்தக் குழந்தையை தாயிடமிருந்து பிரித்து விடுகின்றனர். அதன் பிறகு பெரும்பாலான தாய்மார்களுக்கு தனது குழந்தை எங்கு இருக்கிறது என்று தெரிவதில்லை. இதில் பல குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக சிறை விதிமுறைகளில் ஒரு பிரிவைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். புதிய பிரிவின்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை, வாரத்துக்கு 3 முறை பார்க்க அனுமதிக்க வேண்டும். மேலும் அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு மேனகா கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, சிறையில் உள்ள தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை தொண்டு இல்லத்தில் தங்க வைக்கின்றனர். பின்னர் சிறைக்கும் தொண்டு இல்லத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் தனது குழந்தையுடனான தொடர்பை தாய் இழக்க நேரிடுகிறது. எனவேதான் சிறை விதிமுறைகளில் புதிய பிரிவை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து