முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசவ வலியில் துடித்த பெண்ணை சுமந்து சென்ற போலீஸ் அதிகாரி

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

சண்டிகா், ஹரியாணா மாநிலம் பலாப்கர் பகுதியைச் சேர்ந்தவர் பாவனா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு வந்திருந்தார். ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகர போலீஸ் அதிகாரி சோனு குமார், ஒரு வழக்கு விஷயமாக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

ரயில் நிலையத்தில் பாவனா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் அளித்தார். ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து இ-ரிக்ஷாவில் பாவனாவை ஏற்றிக் கொண்டு, மதுரா மாவட்ட மருத்துவமனைக்கு சோனு குமார் சென்றார். அங்கு சென்ற போது மருத்துவமனையில் ஸ்ட்ரச்சரும் இல்லை. வலியால் துடிப்பதைப் பார்த்த சோனு குமார், உடனடி யாக பாவனாவை தனது கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினார். பின்னர் மருத்துவமனையில் பாவனாவுக்கு சுகப் பிரசவம் நடந்தது.

சரியான நேரத்தில் உதவி செய்த சோனு குமாருக்கு பாவனாவும் அவரது கணவர் மகேசும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். தாயையும் சேயையும் காப்பாற்றிய போலீஸ் அதிகாரியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து