முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் ஏமாற்றியதுபோல் இனி எப்பொழுதும் ஏமாற்ற முடியாது அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் பேச்சு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர்ராமர், செல்வம், தீபஜோதி செல்விமதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் வரவேற்றார். இக்கூட்டத்தில்  மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமைகழக பேச்சாளர்கள் குமரிபிரபாகரன், குறள்பித்தன், டி.வி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை மற்ற திராவிட கட்சிகள் கொண்டாடினாலும், அவரின் புகழை நிலைநிறுத்துகின்ற, கொண்டாடுகின்ற உரிமை, தகுதி நமது கழகத்திற்கு மட்டுமே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றலை பார்த்து, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட  மாமேதைகளுக்கு சமமாக பேரறிஞர் அண்ணா அவர்களை  தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் இந்நாட்டு இங்கர்சால் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா அவர்கள் தனது எழுத்தாற்றல், பேச்சாற்றலால், தமிழர்களின் வீரத்தை விவேகத்தை, உயரிய பண்புகளை நிரூபிக்க  விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பாடுபட்டார். சுதந்திர இந்திய நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையை தனது பேச்சாற்றல், எழுத்தாற்றலால் உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அவர் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த பேச்சாற்றலை கண்டு வியந்து அவரை தொடர்ந்து பேச அனுமதித்தவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு போன்ற அண்ணாவின் கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த அற்புத தலைவரின் வழியிலே நான் நடப்பேன் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சிக்காலத்திலே தான் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா போக்குவரத்து கழகம், அண்ணா மாவட்டம் என அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்டது. அண்ணா அவர்கள் தேர்தலில்  பசி பட்டினியை போக்கும் வகையில்  3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்று கூறி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதை செய்து காண்பித்தார். சென்னை கோவையில் எரியாத வீடுகளை ஏழை எளியோருக்கு கட்டி தந்தார். உலக தமிழ் மாநாட்டை நடத்தி காண்பித்தார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னால் தனது சூழ்ச்சியால் கருணாநிதி திமுக தலைவரானார். அதனை தொடர்ந்து திமுகவை தனது குடும்ப கட்சியாக மாற்றினார். இதனை எதிர்த்த புரட்சித்தலைவரை கருணாநிதி வெளியேற்றினார். பின்னர் புரட்சித்தலைவர் அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் புரட்சித்தலைவர் மிகப் பெரிய வெற்றி பெற்றார். தற்போது புதிதாக கட்சி ஆரம்பிக்க  உள்ள ரஜினி, கமல் ஆகியோர் கட்சி ஆரம்பிக்கவே 3 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் இவர்கள் இடைத்தேர்தலை தைரியமாக சந்திப்பார்களா? தமிழகத்தின் தலையாய பிரச்னைகளான காவேரி, கண்ணகி கோவில், முல்லைபெரியாறு, கச்சத்தீவு, மீனவர், இலங்கை தமிழர்கள் என அனைத்து பிரச்னைகளிலும் தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்தி தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஏராளமான அற்புதமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இது போன்ற திட்டங்களை இனி யாராலும் முறியடிக்க முடியாது. அதன் பயனாக இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் நமது இயக்கத்தை, ஆட்சியை சிதைத்து விடலாம், சின்னத்தை முடக்கி விடலாம் என டிடிவி தினகரன் உட்பட பலரும் திட்டமிட்டார்கள். பொய் வழக்கு போட்டனர். முடிந்ததா? தற்போது 19 மாதங்களை கடந்து நமது கழக ஆட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இடையில் ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் சிறிது ஏமாந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. வரும் தேர்தல்களில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது இயக்கம் மாபெரும் வெற்றியை பெறும் என்று சிறப்புரையாற்றினார்.
   கம்பம் நகர அவைத்தலைவர் காந்தி,  துணை செயலாளர் ஆசிக்அகமது, மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து