முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் சிலை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பெரியார் சிலை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மலர் தூவி மரியாதை.சென்னை அண்ணாசாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார்  திருஉருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்ம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, மாவட்ட  செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ராஜேஷ் மற்றும் தி.நகர் சத்யா மற்றும் கட்சி  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு  பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தழைத்து  நிற்கும்... பகுத்தறிவு தந்தை பெரியார். தமிழகத்தில் சமூக நீதிக்கான விதையை விதைத்தவர். அந்த விதைத்த சமூக நீதிக்கான விதை அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது நம்முடைய தமிழ்நாட்டில்தான் 1921-ம் ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதா? என்கிற ஏக்கம் இருந்த நிலையிலே எல்லோரும் சமம் தீண்டாமை அறவே ஒழிக்கப்படவேண்டும் எந்த விதத்திலும்  ஜாதியின் பெயராலே மதத்தின் பெயராலோ மக்களைஅடிமைப்படுத்த கூடாது என்ற எண்ணத்தோடு தந்தை பெரியார் விதைத்த விதை இன்றைக்கு பெரிய விருட்சமாக  வளர்ந்து அதன் மூலம் ஒரு சமத்துவம் மலர்கின்ற ஒரு மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று சொல்லதக்க அளவிற்கு  அதனுடைய பலனை நாம் இன்றைக்கு அனுபவித்துக்கு கொண்டிருக்கிறோம். அவருடைய 140-வது பிறந்தநாளிலே தமிழக  அரசின் சார்பிலே மாலை அணிவித்து  மரியாதை செய்யப்பட்டது. அவரின் புகழ் உலகம் உள்ளளவும் என்றென்றும் தழைத்து  நிற்கும்.
இவ்வாறு தெரிவித்தார்.

அரசு அனுமதிக்காது...  இதைத்தொடர்ந்து நிருபர்கள் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு சமூக நீதி தந்தையாக இருக்கின்ற தந்தை பெரியாரை இழிவுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையே இழிவுப்படுத்துகின்ற செயலாகதான் இதனை கருதமுடியும். எனவே இதுபோன்று ஒரு  மனிதகுலம் ஏற்றுக்கொள்ளாத இந்த செயலை நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது. இதனை ஆரம்பகட்டத்திலேயே ஒடுக்கப்படவேண்டும் என்கின்ற அந்த மனபான்மையோடு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களுடைய சிலையை அவமதிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

தூர்வார நடவடிக்கை...பழவேற்காடு முகத்தூவராத்தை தூர்வாரத்தை நம்பி 40 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த  முகத்துவாரம் தூர்வாரப்பட்டல்தான் கடல்நீர் உள்ளே வந்து மீன் உற்பத்தி அதிகரிக்கும். அவ்வப்போது முகத்துவாரத்தை அரசு தூர் எடுத்துவருகிறது. தற்போது தூர்வார ரூ.28  கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பசுமை நிதிக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெற்று பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். இதனிடையில் உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரும் பணியை துவங்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெற்று பழவேற்காடு  முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட நினைப்போர் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து