முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.14.5 லட்சம் கோடிக்கு சீன பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,சீன இறக்குமதி பொருட்களுக்கு புதிய கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
தொழில்நுட்ப கொள்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் 5,000 கோடி டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை விதித்தன. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் மேலும், 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கு வரிகளை விதிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கான புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். செப்டம்பர் 24 -ம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்பு 10 சதவீதமாகவும், ஜனவரியில் இருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றி வருவதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது, தமது நிர்வாகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள், தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு 267 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரியை கூட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து