முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிம்-முடன் 3-வது முறையாக பேச்சு: வடகொரியா சென்றார் தென் கொரிய அதிபர்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

சியோல்,வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்கியாங் வந்தடைந்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றவாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக, சியோல் விமான நிலையத்திலிருந்து காலை 8.40 மணியளவில் அதிபர் மூன் ஜே இன் தனி விமானம் புறப்பட்டு, பியாங்கியாங் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.50 மணியளவில் வந்தடைந்தார். தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார். விமானநிலையத்தில் கூடியிருந்த வட கொரியா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர்மட்ட குழுவினருடன் வடகொரியா வந்துள்ளார்.  இரு நாட்டு தலைவர்களின் மூன்று நாட்கள் சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், கொரிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவர்களின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து