முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை பெற்றெடுத்த உலகின் முதல் ஆண் தன் மார்பகத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,குழந்தை பெற்றெடுத்த உலகின் முதல் ஆண் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைடன் தற்போது தன்னுடைய மார்பகத்தை அகற்ற போகிறாராம்.

கடந்த வருடம் நான் அம்மா ஆயிட்டேன் என்று வெட்கம் பொங்க சிவந்த முகத்துடன் சொன்ன ஆண்மகன் ஹைடன்(22). 4 வருடங்களுக்கு முன் கொள்ளை அழகு மிக்க பெண்ணாக இருந்த இவரது உடலில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் நேராக மருத்துவமனை சென்று ஆணாக மாறும் ஆபரேஷனை செய்து கொண்டார்.

ஆணாக மாறினாலும் அதே அழகுடன்தான் இருந்தார் ஹைடன். கடந்த வருடம், பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது கர்ப்பப்பையில் செலுத்தி அதன் மூலம் கர்ப்பமும் ஆனார். ஒரு ஆண் கர்ப்பம் தரித்திருக்கிறார் என்ற தகவல் உலகம் முழுவதும் பரவி எல்லாரையுமே கிறுகிறுக்க வைத்தது. அம்மா ஆன சந்தோஷத்தில் ஹைடன் பலவித போஸ்களில் போட்டோக்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டார்.

ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் இங்கிலாந்தில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையும் இவருக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் தற்போது தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் செய்ய உள்ளார். முதற்கட்ட சிகிச்சை கூட முடிந்து விட்டதாம். இந்த ஆபரேஷனுக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 18 லட்சம் செலவாகி விட்டதாம். இன்னும் கடைசியாக ஒரே ஒரு ஆபரேஷன்தான் பாக்கியாம். அதுவும் முடிந்து விட்டால், என்னை நான் முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் ஹைடன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து