முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்ல போகும் ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற நபர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்ல இருக்கிறார். இவரது கதை மிகவும் விசித்திரமானது ஆகும்.

ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல்முறையாக இந்த சாதனையை செய்ய உள்ளது. நேற்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017-ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.

நிலவிற்கு செல்ல போகும் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா உலகம் முழுக்க வைரலாகி உள்ளார். இவரும், எலோன் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்களாம். அதாவது உலகிலேயே முதல் முறையாக காசு கொடுத்து நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் இவர்தான். யுசாகா மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்.இவர்தான் 2023-ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்கிறார். இந்த நிலவு பயணத்திற்கு இவர் பணம் கொடுத்துள்ளார். உலகிலேயே பணம் கொடுத்து நிலவிற்கு செல்லும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து