முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 எருமைகள் உட்பட அரசு சொத்துக்களை ஏலம் விட்ட பாக்.பிரதமர் இம்ரான்கான்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் அரசுக்கு சொந்தமான கார்கள், பைக்குகள், ஹெலிகாப்டர்கள் பல ஏலம் விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் இம்ரான் கான் பதவியேற்றார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார்.

பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். தற்போது அடுத்த அதிரடியை செய்துள்ளார்.

பாகிஸ்தானில் நேற்று 120க்கும் அதிகமான அரசு கார்கள் ஏலம் விடப்பட்டது. அதேபோல் ஹெலிகாப்டர்கள் சில ஏலம் விடப்பட்டது. மேலும் சில பைக்குகள், பர்னிச்சர்கள் கூட ஏலம் விடப்பட்டது. இதில் 45 கார்கள் புல்லட் புரூப் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அரசுக்கு சொந்தமான எருமை மாடுகள் கூட ஏலம் விடப்பட்டது. மொத்தமாக 8 எருமைமாடுகள் ஏலம் விடப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில், சுற்றிக்கொண்டு இருந்த அரசுக்கு சொந்தமான எருமை மாடுகள் ஆகும் இது. இதையும் ஏலம் விட்டு இருக்கிறார்கள்.

அங்கு செய்யப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கையை அடுத்து இந்த ஏலம் நடைபெற்று இருக்கிறது. அரசின் கடன் சுமையை குறைக்கும் வகையில் இந்த ஏலம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வருவாயை வைத்து கடனை அடைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து