முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை குறைவு என்றால் கூடுதல் விமானங்களை வாங்கலாமே! நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட குறைவான விலைக்கு ரபேல் விமானம் வாங்குவதாக உண்மை என்றால் கூடுதலாக விமானங்களை வாங்க வேண்டியது தானே என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்ததை விட, 9 சதவீதம் குறைவான விலைலேயே ரபேல் விமானங்களை வாங்க பா.ஜ.க. ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் நடந்தது. தரமான விமானங்களை பாஜக ஆட்சியில் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனக் கூறினார்.

இதற்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணி இதுகுறித்து கூறுகையில், எல்லையில் அதிகமான ஆபத்து உள்ளது. இந்த சூழலிலும் வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்க பா.ஜ.க. அரசு ஒப்பபந்தம் செய்துள்ளது. விலை மலிவு என்றால் கூடுதல் விமானங்களை வாங்க வேண்டியது தானே. அப்படியானால் தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து