முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் ஆட்சியைக் கலைக்காமல் எங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்: கவர்னரிடம் காங்கிரஸ் மனு

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி, கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான தங்களை அரசமைக்க அழைப்பு விடுக்குமாறு மாநில கவர்னர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய சூழலில், கோவாவில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு மாநில கவர்னரிடம் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இதற்காக, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் கவர்னர் மாளிகைக்குச் சென்றனர். எனினும், கவர்னர் மிருதுளா வெளி மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்ததால் அவர்கள் அவரை சந்திக்க இயலவில்லை.

இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கூறியதாவது:-

கோவா சட்டப்பேரவையை கலைக்க வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும் ஆளுநர் தரப்பில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

ஏனெனில், முதல்வர் பாரிக்கர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாலும், ஆளும் கூட்டணியில் உள்பூசல் எழுந்துள்ளதாலும் பேரவையை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்சி புரிவதில் தோல்வியடையும் மாநிலங்களில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தும் பழக்கம் பா.ஜ.க.வுக்கு உள்ளது. கோவாவில் அதுபோன்று நிகழ காங்கிரஸ் அனுமதிக்காது. மேலுமொரு தேர்தல் நடத்தும் சூழலில் அரசு கருவூலம் இல்லை.

காங்கிரஸுக்கு இதர கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கவர்னர் வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் நாங்கள் ஆட்சியமைக்க இயலும். பேரவையில் எங்களது பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடியும் என்று சந்திரகாந்த் காவ்லேகர் கூறினார்.

கோவா பேரவையில் தற்போது பா.ஜ.க.வுக்கு 14 உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான கோவா ஃபார்வர்டு கட்சி மற்றும் மகாராஷ்டிரவாடி கோமாந்தக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும் உள்ளனர். இதுதவிர, 3 சுயேச்சை எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து