முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகடிவதை தடுப்புக்குழ கலந்தாய்வுக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

    மதுரை, -மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவம், பொறியியல், சட்டக்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, மூத்த மாணவர்களால் இழைக்கப்பெறும் பகடிவதை கொடுமையை தடுப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்,  தலைமையில்   நடைபெற்றது.
 இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்:
 கல்லூரி அளவிலான பகடிவதை தடுப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.  குழுவில் இடம் பெறும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பிரதிநிதிகள் ஆகியோரது பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள், கல்லூரி விளம்பர பலகை மற்றும் விடுதி விளம்பரப் பலகைகளில் விளம்பரம் செய்திடல் வேண்டும்.  அதுபோல கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் பகடிவதை தொடர்பான புகார்களை தெரிவிக்க வுToll Free Number  1800-180-5522 மற்றும் இணையதள முகவரி www.antiragging.com இடம்பெற தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
 கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களில் பகடிவதைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள், பகடிவதை தொடர்பான புகார் தெரிவிக்கும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் பகவடிவதையில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்கப்படும்.  தண்டனைகள் ஆகிய விபரங்கள் இடம்பெறும் விளம்பரப் பதாகைகள் நிறுவிட கல்லூரி நிர்வாகம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  கல்லூரிகளில் பகடிவதை தடுப்புக்குழு அமைக்க வேண்டும். இக்குழுவில் முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியர்களில் ஒருவர் உறுப்பினராக இடம் பெறச் செய்ய வேண்டும்.  இக்குழு கல்லூரி நேரங்களில் தவிர விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஏதேனும் பகடிவதை நடைபெறுவது குறித்து உறுதி செய்யும் பொருட்டு திடீர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 கல்லூரிகளில் நடைபெறும் பகடிவதை தொடர்பான வாராந்திர அறிக்கையினை பிரதி வெள்ளியன்று உரிய படிவத்தில் வாரந்தோறும் இணை இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிட அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.  மேலும் கையெழுத்திட்ட நகலை ஸ்கேன் செய்து [email protected] என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.  இதுதவிர மருத்துவம், சட்டம், பொறியியல் கல்லூரிகளிலும் பகடிவதை நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் கல்லூரிகளின் சார்பாக மாணவப்பிரதிநிதி ஒருவரை தேர்வு செய்த அதன் விபரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்திடல் வேண்டும்.  இக்கல்லூரிகளில் பகடிவதை தொடர்பான பருவ வெளியீடுகளை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும். 
 மேலும் பகடிவதை தடுப்புக் குழுவில் இடம் பெறும் மாணவப் பிரதிநிதி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்து அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிட வேண்டும்.  பகடிவதை தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பகடிவதையில் ஈடுபடும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.
 இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  .இராஜசேகரன்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து