முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களை மதித்தால்தான் பதவி: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால், கட்சித் தொண்டர்களை மதிப்பவர்கள் மட்டுமே அமைச்சர் அல்லது முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தொண்டர்களுக்காக நேரத்தை செலவிடாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி  தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபால் நகரில் உள்ள பெல் தொழிற்சாலையின் தசரா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவர் ஒருவர் அமைச்சர் பதவிக்கு வந்தாலும், முதல்வர் பதவிக்கு வந்தாலும், அவர்கள் கட்சியின் தொண்டர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சித் தொண்டர்களுக்காக அவர்களின் கதவுகள் திறக்கப்படாவிட்டால், அடுத்த 15 நிமிடங்களுக்குப் பிறகு பதவியில் இருக்க மாட்டார்கள். தொண்டர்களுக்காக நேரத்தை செலவிடாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. ஏனெனில், கட்சிக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தியவர்கள் தொண்டர்கள்.

அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். அதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கும், மகளிருக்கும் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மோடி அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய ஊழலாகும். நாட்டின் 15 செல்வந்தர்களுக்கு கொடுப்பதற்காக, சிறு வணிகர்களிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டது.

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக, நேர்மையானவர்கள் மட்டுமே வரிசையில் காத்துக் கிடந்தனர். மோசடி பேர்வழிகள் யாரையும் வரிசையில் பார்த்திருக்க முடியாது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காகவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது. சிறு வணிகர்களை முடக்குவதற்காகவே சரக்கு-சேவை வரி விதிப்பையும் மத்திய அரசு அமல்படுத்தியது. தொழிலதிபர்களுக்கு கடனாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாராக்கடனாகி விட்டன. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், 5,000 ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாத விவசாயி, ஏமாற்றுக்காரர், திருடர் என்று முத்திரை குத்தப்படுகிறார். 15 தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1.5 லட்சம் கோடி கடனை பாஜக தலைமையிலான அரசு தள்ளுபடி செய்து விட்டது.

நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் ஒட்டு மொத்த கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து