முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதத்தினை ஆணையாளர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

  மதுரை,- மதுரை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதத்தினை  ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்   புது ராம்நாட் ரோடு மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில்   கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்க்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கத்தில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் 15.09.2018 முதல் 02.10.2018 வரை பல்வேறு தூய்;மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் அடிப்படையில் 15.09.2018 அன்று மாநகராட்சி சுற்றுச் சூழல் பூங்கா மற்றும் வண்டியூர் சுந்தரம் பூங்காவிலும், 16.09.2018 அன்று அனைத்து பேருந்து நிலையங்களிலும், 17.09.2018 அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 
மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை வலியுறுத்தியும், கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும், பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகரை உருவாக்குவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (18.09.2018) தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதத்தினை ஆணையாளர்  துவக்கி வைத்தார்.

                       மேலும் இன்று 19.09.2018 அன்று அனைத்து வார்டு அலுவலகங்களில் தீவிர துப்புரவுப்பணியும், 20.09.2018 அன்று அனைத்து காய்கறி மார்க்கெட்களிலும் தீவிர துப்புரவுப்பணியும், 21.09.2018 அன்று அனைத்து பூங்காகளில் தீவிர துப்புரவுப்பணியும், 22.09.2018 அன்று மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர துப்புரவுப் பணியும், 23.09.2018 அன்று அனைத்து அரசு அலுவலகங்களில் தீவிரப் துப்புரவுப் பணியும், 24.09.2018 அன்று அனைத்து சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியும், 25.09.2018 அன்று மாநகராட்சி அனைத்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணியும், 26.09.2018 அன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும், 27.09.2018 அன்று பெட்ரோல் பங்க்,  மற்றும் திரையரங்குகளில் தீவிரப் துப்புரவுப்பணியும், 28.09.2018 அன்று வைகை ஆற்றுப் பகுதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் தீவிர துப்புரவுப்பணியும், 29.09.2018 அன்று நான்கு மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியும், 30.09.2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் தீவிர துப்புரவுப் பணியும், 01.10.2018 அன்று உணவகங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுத்தம் செய்யும் பணியும், 02.10.2018 அன்று பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் .ப.மணிவண்ணன்,   உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து