முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா ஓபன் பேட்மிண்டன்- தொடக்க சுற்றில் பி.வி. சிந்து வெற்றி - சாய்னா வெளியேற்றம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

செப் : சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சாய்னா நேவால்

ஜப்பான் ஒபன் பேட்மிண்டன் தொடர் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் சீனா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. இதில பிவி சிந்து, சாய்னா நேவால் கலந்து கொண்டார்கள். சாய்னா நேவால் முதல் சுற்றில் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார். இதில் சாய்னா 22-20, 8-21, 14-21 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பி.வி. சிந்து வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானின் சயேனா கவாகாமியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி சீன தைபே ஜோடியிடம் 21-13, 13-12, 12-21 என தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து