முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஊசியை மறைத்து வைத்தால் 15 வருட சிறை - ஆஸி. பிரதமர் மோரிஸன் ஆவேசம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிட்னி : ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல். இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்து விடுவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஸ்ட்ராபெர்ரி பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிச் சென்று சாப்பிட்ட 3-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், பலர் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் போது, அதில் ஊசி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக்கிலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர்.

இதையடுத்து, ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து தரமான ஸ்ட்ராபெரி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்காலிகமாகத் தடை விதித்து நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி வைக்கும் விவகாரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் நேற்று நிருபர்களிடம் சிட்னியில் அளித்த பேட்டியில் கூறுகையில்,

மக்கள் சாப்பிடும் ஸ்ட்ராபெரி பழங்களில் மெல்லிய ஊசியை மறைத்து வைக்கும் செயல் தீவிரவாதத்தின் ஒரு பகுதி. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும். விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம் என்று தெரிவித்தார். இருப்பினும் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் முன் மக்கள் அதை வெட்டிச் சோதித்த பின் சாப்பிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து