முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம்.-மில் கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வெளியே வரும் - விநாயகர் சதுர்த்திக்காக புனே இளைஞர் அசத்தல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புனே : வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் பணம்தான் வெளியே வரும். ஆனால் புனேவில் உள்ள ஏ.டி.எம்.மில் கொழுக்கட்டை வெளியே வருகிறது.

நாடு முழுவதும் கடந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், புனே சஹாகர் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் குல்கர்னி இதில் புதுமையைப் புகுத்த நினைத்தார். ஏ.டி.எம். போன்ற இயந்திரத்தை உருவாக்கிய அவர், அதில் செலுத்த பிரத்யேக கார்டையும் உருவாக்கினார். கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வருவது போல இயந்திரத்தை வடிவமைத்தார். அதில் எண்களுக்குப் பதிலாக மன்னிப்பு, அன்பு, அமைதி, அறிவு, பக்தி, சேவை ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.  தற்போது அந்த இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வெளியே வருகிறது. இது குறித்துப் பேசிய குல்கர்னி, கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது' என்றார். இந்த இயந்திரத்துக்கு ஏ.டி.எம். என்றே பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து