முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாருக்கு ஆளான கேரள பிஷப் போலீசில் ஆஜர்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல், கேரள காவல்துறையின் முன்பு ஆஜர் ஆனார்.

பிஷப் மீதான விசாரணையை கேரள காவல் துறை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கே.சுபாஷ் தலைமையிலான ஐவர் குழு நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப்பாகப் பணியாற்றி வந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். இப்புகார் மீது கோட்டயம் டி.எஸ்.பி. ஹரிசங்கர், வைக்கம் டி.எஸ்.பி. கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. பிராங்கோ போலீசார் முன்னிலையில் ஆஜரான நிலையில் தான் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சத்தால், முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும்  26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து