முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தம் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை மற்றும் கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகளை விரைவு படுத்துவது குறித்தும்  அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்கூட்டம்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலவ்ருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், செல்லூர் கே.ராஜூ, சரோஜா, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், காமராஜ், ஒ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், வளர்மதி, பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு...

இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு வரும் 30-ம் தேதி சென்னையிலும், கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியினருக்கு அறிவுறுத்தல்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து கட்சியினருக்கு முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினர். முன்னதாக தலைமைக் கழகத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து