முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு...

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.பலத்த காற்று வீசும் என்பதால் அந்தமான் மற்றும் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20 ஆகிய தேதிகளிலும், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது என சென்னை  வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து