முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் 23-ம் தேதி தொடக்கம் ராஞ்சியில் பிரதமர் துவக்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற 23-ம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு....மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் மூலம் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான இதற்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசாலும், மீதி தொகையை மாநில அரசாலும் ஏற்கப்படும். 10 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் மருத்துவ பலனை பெறலாம். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

முன்கூட்டியே தொடக்கம்...இந்த நிலையில் இந்த திட்டம் 2 நாள் முன்னதாக வருகிற 23-ந்தேதி தொடங்கப்படுகிறது. 25-ம் தேதி பிரதமர் இல்லாத காரணத்தால் 23-ம் தேதியே இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இது குறித்து தேசிய சுகாதார நிறுவன தலைவர் இந்து பூசன் கூறியதாவது:-

ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தை வருகிற 25-ந்தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அந்த நேரத்தில் இல்லாத காரணத்தால் 23-ம் தேதியே இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அவர் இந்த திட்டத்தை ராஞ்சியில் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து