முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் இரண்டாம் சீசனை வரவேற்கும் செர்ரி பிளாசம் மலர்கள்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் - கொடைக்கானலில் இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக செர்ரி பிளாசம் மலர்கள் தற்போது பூத்துள்ளது.
 மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் தற்போது இரண்டாம் சீசன் துவங்கி உள்ளது. ஆப் சீசன் எனப்படும் இந்த இரண்டாம் சீசனுக்கு முன்னதாகவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ பூத்தது. இந்த குறிஞ்சிப்பூ சீசன் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந் நிலையில் செர்ரி பிளாசம் பூ என்ற பூ தற்போது மலைப் பகுதிகளில் பூத்துள்ளது. மர வகையினை சேர்ந்த இந்த பூ பூத்த மரத்தில் இலைகளே இருக்காது. மலர்கள் மட்டுமே மரம் முழுதும் இருக்கும். இது பார்ப்பதற்கு மிக அழகாக ரோஸ் நிறத்தில் பூத்துள்ளது.
 இந்த பூக்கள் இமய மலைப் அடிவாரப் பகுதி மாநிலங்களான உத்ரகாண்ட், மேற்கு வங்கம், ஜம்மு காஸ்மீர், சிக்கிம், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜால்பைகு, டார்ஜலிங், கோவில் நகரங்களான கல்பா, சரகான், சிடகுல், சங்லா, நர்கண்டா உள்ளிட்ட பகுதியிலும அதிக அளவில் உள்ளது. ஹிந்தியில் இந்த பூவினை பத்ம ஹஸ்தா என்று அழைக்கின்றனர்.
 இது தவிற ஜப்பான் நாட்;டில் இந்த செர்ரி பிளாசம் பூக்களுக்கு அந்த நாடு விழாவே கொண்டாடுகின்றது.
  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பூக்கக் கூடிய இந்த பூ பூக்கும் மரங்களை உள்@ர்வாசிகள் ரப்பர் மர பூக்கள் என்கின்றனர். ரோசாசியா என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது இந்த செர்ரி பிளாசம் பூக்கள். கொல்கொத்தா நகராட்சியும், வனத்துறையும் இந்த பூக்களை அந்த பகுதியில் நட்டு வருகின்றனர். இந்த பூக்கள் பூக்கும் மரங்களை கொடைக்கால் வனப் பகுதி மற்றும் நகர் பகுதியில் அதிகம் நட வேண்டும் என்றும் இது பூக்கும் காலத்தில் நகர் பகுதி மிக அழகாக காட்சி அளிக்கும என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து