முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பப் பெண்களை இழிவாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது, பல்வேறு காவல் நிலையங்களில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்....திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அறநிலையத் துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சுசீந்திரம், கோட்டார், தக்கலை, மண்டைக்காடு, திருவட்டார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு....மேலும் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அளித்த புகாரின்பேரில், கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இதேபோல, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வர முடியாத, பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பிரிவு உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நீதித்துறை மற்றும் காவல் துறை குறித்து தவறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து