முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,அமெரிக்காவில் ஏர்பஸ் 321 விமானம் ஒன்றை மாணவர் ஒருவர் கடத்த முயன்று இருக்கிறார். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் இருக்கும் பெரிய விமானங்களில் அமெரிக்காவில் உள்ள ஏர்பஸ் 321 விமானமும் ஒன்றாகும். நீண்ட தூர பயணங்களுக்கு அமெரிக்க விமான துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை இயக்குவதும் மிகவும் சிரமமான விஷயம். 

இந்த நிலையில் அமெரிக்காவின் ஓர்லாண்டோ விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக இந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. வைபை கருவி பொருத்தும் பணி அந்த விமானத்திற்குள் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் பணியாளர்கள் வெளியேறிய நேரம் பார்த்து அங்கு 20 வயதேயான நிஷால் சங்கத் என்ற இளைஞர் விமானத்தை கடத்த முயன்று இருக்கிறார்.

வேகமாக வேகமாக விமானத்திற்குள் நுழைந்தவர் விமானிகளின் அறையான காக்பீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் விமான எஞ்சினை ஆன் செய்து இருக்கிறார். ஆனால் அவர் அதன்பின் விமானத்தை இயக்க முடியாமல் திணறி உள்ளார். அதற்குள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் நுழைந்தனர். இதனால் அவர் விமானத்தை கடத்துவது தடுத்து நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவரான நிஷால் சங்கத், கனடா மற்றும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் . பைலட்டிற்கு படித்திருக்கும் இவர் கமர்சியல் விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்துள்ளார்.  பாதுகாப்பு அதிகாரிகள் அநத் இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து