முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும்: அமித்ஷா பேச்சு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி, நமது கலாசாரத்தின் வெற்றியாக அமையும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக இரு ஹிந்து மொழி நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது:
நமது சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால், ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு ராம ஜென்ம பூமி இயக்கம் நமது நாட்டின் மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது. எனினும், இப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பேச முடியவில்லை.
ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையும், விரும்பமும்தான் வெற்றி பெற வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கான கோரிக்கை சரியான திசையில்தான் செல்கிறது. அயோத்தில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து சுமார் 600 ஆண்டுகளாக அதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி, நமது கலாசாரத்தின் வெற்றியாகவும் அமையும் என்றார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஆதரவு அளித்தால் மிகவும் ஏற்புடையதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து