முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்குள்ள துங்கர்பூர் மாவட்டத்தில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது:நான் இந்த நாட்டின் பிரதமராக விரும்பவில்லை. மக்களின் சேவகனாகவே இருக்க விரும்புகிறேன்' என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், அவர், மக்கள் சேவகன் இல்லை; அவர் ஒரு கொள்ளையர்' என்று மக்கள் கூறுவதை வீதிகளில் கேட்க முடிகிறது.பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடு செல்வதற்கு முன் ஜெட்லியை சந்தித்துப் பேசியுள்ளார். அவரை வெளிநாடு செல்வதற்கு ஜெட்லி அனுமதித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக, மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கிறார்.

15 தொழிலதிபர்களின் ரூ.2,30,000 கோடி வாராக் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், கடன் சுமையால் அவதிப்படும் விவசாயிகளுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.சீனாவில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. மத்தியிலும், ராஜஸ்தானிலும் ஆளும் பா.ஜ.க. அரசுகளால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.

பா.ஜ.க. கண்டனம்:இதனிடையே, மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் பதவிக்கு உரிய மதிப்பை ராகுல் காந்தி அளிக்கவில்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து