முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தான்சானியாவில் நடந்த படகு விபத்தில் இதுவரை 218 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோடோமா,தான்சானியாவில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் சிறிய நாடான தான்சானியாவையும், உகாண்டாவையும் பிரிக்கும் வகையில் ஓடும் பெரிய ஏரிகளில் லேக் விக்டோரியா எரியும் ஒன்று.

மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தான்சானியாவின் உகாரா பகுதியில் இருந்து புகலோராவை நோக்கி இந்த படகு சென்று உள்ளது. சுமார் 400 பயணிகள் இந்த படகில் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏரியின் நடுவில் வரும் போது படகு அப்படியே நீரில் மூழ்கி இருக்கிறது. படகில் ஏற்பட்ட துளை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பயணிகளை ஏற்றியதால் படகில் துளை விழுந்திருக்கிறது. துளையின் வழியே தண்ணீர் உள்ளே புகுந்து அப்படியே படகு கவிழ்ந்து உள்ளது. இதனால் படகில் இருந்த 400 பேரும் நீருக்குள் மூழ்கினர். கடந்த 20-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

இந்த விபத்து காரணமாக மொத்தம் 218 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 168 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படகின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். படகை ஓட்டி சென்ற  நபர் உயிர்பிழைத்து விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து