முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நி்ர்வாண நிலையில் திருமணம் செய்த இத்தாலி காதல் ஜோடிகள்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மிலன்,இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின்(34).  இவருக்கு 29 வயதான ஆர்சன் என்ற ஒரு காதலி உள்ளார். நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்து அதற்காக ஒரு தீவையும் தேர்ந்தெடுத்தனர்.
இயற்கை விரும்பிகளான இருவருமே நிர்வாண நிலையில் திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் ஆள் அரவம் இல்லாத இந்த தீவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து மணப்பெண் கூறிய போது, நிர்வாண நிலையில்தான் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம். ஆனால் இதை என் வீட்டில் சொன்னால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால்தான் எங்கள் இரு வீட்டு பெற்றவர்களை கூட அழைக்காமல் நாங்கள் இப்படி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் முறைப்படி எங்கள் திருமணம் நடக்கும் என்றார்.

ஆனால் நிர்வாணமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பாராம்பரிய சம்பிராதயப்படி மணப்பெண், தலையில் ஒரு வெள்ளைத்துணியும், மணமகன் கழுத்தில் ஒரு டை மட்டும் அணிந்திருந்தார்.  இவர்கள் இப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமணத்திற்காக அழைக்கப்பட்டிருந்த 2 பேரும் நிர்வாணமாகத்தான் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து