முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை அகற்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா ராகுல்? பா.ஜ.க. தலைவர் அமித்ஷா சந்தேகம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பிரதமர் மோடியை அகற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தன. பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ராணுவத்தினர் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி விட்டார்கள். இந்தியாவின் ஆன்மாவை மோடி அவமதித்து விட்டார் என்று ராகுல் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.இதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி ரீடுவிட் செய்திருந்தார். அதில் ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. பதில் அளிக்க வேண்டும். மோடியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த டுவிட்டைப் பார்த்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு சந்தேகங்களை டுவிட்டரில் கேட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ராகுல்  வலியுறுத்துகிறார். இப்போது ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தானும் ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து, சர்வதேச அளவில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து