முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .மகேசன் காசிராஜன், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந்தாய்வுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந்தாய்வுக்; கூட்டம் 
 இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்   தெரிவித்ததாவது:
  01.09.2018-ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,53,662 ஆகும்;.  இதில், தற்போது இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தால், அதனை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெருமளவு இடம்பெறச் செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இன்னும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், பாலினம், வயது, முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக  இடம்பெற்றிருந்தால் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி வாக்காளர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று படிவம்-8 ஐ வழங்கி, சரியான விபரங்களை பூர்த்திசெய்து, படிவத்தின் மேல் பகுதியில் என்ன வகையான மாற்றம் என தெளிவாக குறிப்பிட்டு படிவத்தினை திரும்ப பெறவேண்டும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு சுருக்கத்;திருத்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்    .மகேசன் காசிராஜன்,   கேட்டுக்கொண்டார்கள்.
 மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
 விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1881 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 939 இடங்களில் 01.09.18 அன்று முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 நடைபெற்று வருகிறது. இது போன்று இன்றும் 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு  முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் கடந்த 01.09.18 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க   நீக்க, திருத்தம் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.
 மேலும், 25 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் படிவம் 6 வழங்கும்போது தங்களது பழைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் படிவம் 6யை பூர்த்தி செய்து பெறும் போது அவர்களுடைய தாய் தந்தையர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள எந்த ஒரு சிரமமின்றி விண்ணப்பப் படிவங்கள் வழங்க ஏதுவாக மூன்று கல்லூரி தூதுவர்கள் அடங்கிய நகரும் வாக்காளர் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டு, பெயர் சேர்த்தல்   நீக்குதல் மற்றும் திருத்தம்  போன்ற பணிகள் 09.09.18 முதல் நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்;  எனவும், இது தவிர 31.10.18 வரை சம்பந்தப்பட்ட வாக்கு சாவடியின் நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடமோ அல்லது வாக்கு சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்ஃநகராட்சி ஆணையரிடமோ அல்லது வருவாய் கோட்டாட்சியரிடமோ  விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்;  தெரிவித்தார்கள்.
 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயகுமார்,  உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து