முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தில் தேர்தல் ஆணையம்:ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில்  நடைபெற்ற கல்வித்துறை நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:

"நாங்கள் தேசத்தை ஒருங்கிணைக்கப் போகிறோம்'' என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி வருகிறார். தேசத்தை ஒருங்கிணைக்க அவர் யார்? தேசம் தன்னைத்தானே ஒருங்கிணைத்துக் கொள்ளும். இன்னும் அடுத்த சில மாதங்களில் அவர்களது பிம்பம் உடைந்துபோகும்.

தங்கப் பறவையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கைப்பற்றியிருப்பதை எதிர்த்துதான் நாம் போராடி வருகிறோம். அவர்களுக்கான தேர்தல் களம் என்னவென்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். அதில் அவர்கள் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மீண்டும், மீண்டும் வெற்றி பெற முடியாது.

அதை தெளிவாக உணர்ந்த காரணத்தினால்தான், தேர்தல் என்பது வரும், போகும் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்திய அரசமைப்புகளை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

கல்வி நிலையங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் ஏற்கெனவே அவர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன. கருத்துரிமை இல்லை: நாட்டில் ஒற்றைக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து