முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு நன்மை சுமித்ரா மகாஜன் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

சிம்லா,மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டுக்கு பலனளிக்கும் என்று பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

இமாசலப் பிரதேச சட்டப் பேரவை சார்பில் இரு நாள் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கத் தொடக்க விழா அந்த மாநிலத் தலைநகர் சிம்லாவில்  நடைபெற்றது. அதில் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர், எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு தலைமையேற்று சுமித்ரா மகாஜன் பேசுகையில், "ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டிய தருணம் இது; அவ்வாறு ஒரு சேர தேர்தல் நடத்துவதுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும்' என்றார் அவர்.
மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒருங்கிணைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியும் இக்கருத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து