தூய்மையே சேவை தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கான கருத்து பட்டறை நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
23 rmd news

ராமநாதபுரம்,- தூய்மையே சேவை தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கான கருத்து பட்டறை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
மத்திய , மாநில அரசுகள்,  மகாத்மா காந்தி அவர்களின் 150ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாகவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது.  அதன்படி, 15.09.2018 முதல் 02.10.2018 வரையிலான நாட்களில் தூய்மையே சேவை என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தூய்மை சேவை என்ற தலைப்பில் திட்ட மாதிரி சமர்ப்பிக்கும் மாவட்ட அளவிலான கருத்து பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, சுற்றுப்புற சுகாதாரம், கழிவு மேலாண்மை தொடர்பான தங்களது திட்டங்களை எடுத்துரைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ்  தலைமையில், மாணாக்கர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் முழு சுகாதார மாவட்டம்-முன்னோடி மாவட்டம் எனபதை வலியுறுத்தும் வகையில் தூய்மையே சேவை வாசகத்தை அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்   த.ஹெட்சி லீமா அமாலினி, செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் கோ.அண்ணாதுரை  உள்பட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து