முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் இருந்து வங்கதேசத்தவர் நீக்கப்படுவார்கள் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் கரையான் போன்றவர்கள்; அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறினார்.

ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேட்டை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் சுமார் 40 லட்சம் பேர் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியது தெரிய வந்துள்ளது. ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் பாஜக அரசு வெளியேற்றும்.ராமாயணத்தில், ராவணனால் ராமரின் காலைக் கூட அசைக்க முடியாது. அது போல் ராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. பாஜக அரசு என்ன செய்து விட்டது? என்று ராகுல் கேள்வி எழுப்புகிறார். 4 தலைமுறையாக குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் என்ன சாதித்து விட்டது? என்பதை மக்களுக்கு ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் பின்தங்கிய நிலையில் இருந்தது. மாநிலத்தை முன்னேற்ற முதல்வர் வசுந்தரா ராஜேதான் உழைத்தார். மாநில மற்றும் மத்திய அரசுகள் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி உள்ளன என்று அமித் ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து