முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசியல் நெருக்கடி காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை விடுதியில் தஞ்சம் குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ.வும் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,கர்நாடகத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ் -காங்கிரஸ் கூட்டணி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் நேரடியாகவே எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சுதாகர், நாகராஜ் மற்றும் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆகியோர் மாயமானார்கள். இவர்கள் சென்னைக்கு காரில் வந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று அங்குள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். நேற்று காலையில் அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் போனில் பேசினார்கள். அப்போது அவர்கள் ஆன்மீக பயணம் செல்வதாக கூறினார்கள். மதியத்திற்கு பிறகு அவர்களது போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் 3 பேரும் பா.ஜனதா கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்துமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதைத்தெடர்ந்து முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உடனடியாக பெங்களூரு திரும்பினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களை அழைத்து பேசினார். அவர்களிடம் பேசும் போது பா.ஜ.க.விடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எந்த காரணத்தை முன்னிட்டும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவி விட கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஹாசனில் நடந்த  ஜே.டி.எஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு  எம்.எல்.ஏ.ஒருவர்  வரவில்லை. அவரும் மாயமாகி விட்டதாக தகவல் வெளியாக உள்ளது.

இது குறித்து குமாரசாமியிடம் கேட்ட போது அதில் அவர் கூறியதாவது:ஜே.டி.எஸ் எம்.எல்.ஏ கவுரிசங்கர் சிங்கப்பூர் சென்றுள்ளார். என்னிடம் அனுமதி பெற்றுதான் அவர் வெளிநாடு சென்றுள்ளார். இதே போல் எம்.எல்.ஏ. நாகராஜ் என்னிடம் அனுமதி பெற்றுதான் மும்பை சென்றுள்ளார். எங்கள் கட்சி தலைமை மீது யாரும் அதிருப்தியில் இல்லை. இந்த ஆட்சி ஐந்தாண்டு நீடிக்கும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து