முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை,மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நடிவர் விஜய்யை லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்புத் தேர்வு செய்துள்ளது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில் அவர்களது 100வது படமான மெர்சல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவானது.

3 தோற்றத்தில் இந்தப் படத்தில் விஜய் நடிக்க, அவரது ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூரியா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இசை வலுசேர்த்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு ஹாலிவுட் பட நடிகர்கள் பெயரும் விஜய் பெயரும் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு மெர்சல் திரைப்படத்திற்காக விஜய்யை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து