முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல் நடமாட்டம் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு ஒடிசா டி.ஜி.பி. தகவல்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,ஒடிசா மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க, பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக டி.ஜி.பி. ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்தார்.

இது குறித்து டி.ஜி.பி. ஷர்மா தெரிவித்ததாவது:-ஒடிசாவின் மால்காங்கிரி மற்றும் கோராபுட் ஆகிய மாவட்டங்களில் நக்சல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பறக்கும் கேமராக்கள் வழியாக நக்சல் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் பயன்படுத்தத் திட்டமிருந்தாலும் முதல் கட்டமாக நக்சல் தீவிரவாதிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க பறக்கும் கேமராக்கள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் ஓரளவுக்கு ட்ரோன்கள் வாங்குகிறோம்.

இது தவிர, புவனேஸ்வரில் நவம்பர் 28-ம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக சில பறக்கும் கேமராக்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் இரவு நேரங்களில் குறைந்தது 60 நிமிடங்கள் படம் பிடிக்கும் கேமராக்கள் காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளன. இவ்வாறு டி.ஜி.பி. ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து