முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீண்டும் மழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள மாநிலத்துக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலப் பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகளைத் தயார் நிலையில் இருக்குமாறு கேரள முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ. 21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து தற்போதுதான் கேரளா மீண்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 64.4 மி.மீ. முதல் 124.4 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் நிலை எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை 26-ம் தேதி  பாலக்காடு, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாநிலப் பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து