முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நலப்பணிப் திட்ட 50 ஆண்டு பொன்விழா: அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி.

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,  பள்ளிகளில்  நாட்டு நலப்பணி திட்டம் தொடங்கி  2019  செப்டம்பர் மாதத்தோடு  50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதனால் இந்த திட்டத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா தொடக்க நிகழ்ச்சியையொட்டி ராமேசுவரம் அருகே அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடங்கி  வரும் 2019 ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.இந்நிலையில் நேற்றைய தேதி முதல் 50 ஆம் ஆண்டு பொன்விழா தொடங்கியுள்ளது.இதனையொட்டி இந்த திட்டத்தின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக  ராமேசுவரம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவக வளாகத்தில் முன்பு ராமேசுவரம் தீவு பகுதியிலுள்ள தங்கச்சிமடம்,ராமேசுவரம் அரசுமேல்நிலைப்பள்ளி மற்றும் ராமேசுவரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மற்றும் வேர்க்காடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணிகள் மற்றும் அப்துல்கலாம் குறித்த வாசகங்கள் குறித்து உறுதி மொழி எடுத்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு ராமேசுவரம் நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம் தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நல்லாசிரியர் ஜெயக்காந்தன் வரவேற்றார். ராமேசுவரம் ரோட்டரி சங்க தலைவர் கருப்பையா, அகில இந்திய யாத்திரைப்பணியாளர் சங்க செயலாளர் காளிதாஸ்,கிரியட் அறக்கட்டளை  நிர்வாகி பொறியாளர் முருகன்,தங்கச்சிமடம் நுகர்வோர் இயக்க செயலாளர் ஜான்போஸ்,ராமேசுவரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம்,முன்னாள் தலைவர் முத்துக்குமார், என்.எஸ்.எஸ் திட்ட புரவலர் சுடலை,கம்பன் கழகம் செயலாளர் நந்தகோபால்,பொருளாளர் ராமச்சந்திரன்,தங்கச்சிமடம்  சமூக ஆர்வாளர் முருகேசன் உள்பட பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து