முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை ராமநாதபுரம் கலெக்டர் வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு, கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30சதவீதரம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.  அதனடிப்படையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்களைக் கவரும் வைகயில் பலவித வண்ணம் மற்றும் வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
 மேலும் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது.  மேலும் பாரம்பரிய ரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் ஆடவர்களைக் கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்,  பருத்தி சட்டைகள் கண்ணை கவரும் வண்ணங்களில்  விற்பனைக்கு உள்ளன.  ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி என இரு நகரங்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையின் மூலம் ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில்  ரூ.70.91 லட்சம் மதிப்பில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டில் ரூ.85 லட்சம் அளவில் கைத்தறி ஆடைகள்  விற்பனை செய்திட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை  மின் வணிக வலைதளத்தில் பெற்று கொள்ளலாம்.  எனவே பொதுமக்கள்  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தரமான கைத்தறி ஆடை ரகங்களை பெற்று பயனடைவதன் மூலம் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்திடவும் வாய்;ப்பாக அமையும். இவ்வாறு கூறினார்.
 இந்நிகழ்ச்சியில்  கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள் (அரசு திட்டம்) எம்.பழனிச்சாமி, (வடிவமைப்பு (ம) உற்பத்தி) கே.செல்வராஜ், ராமநாதபுரம் விற்பனை நிலைய மேலாளர் (பொ) கே.பாண்டியம்மாள் உள்பட அரசு அலுவலர்கள், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள்   கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து